Tuesday, July 4, 2017

நமது வளர்ப்பு சரிதானா?

தன்னை அறிதல் 2


வணக்கம்...

நமது வளர்ப்பு எப்படி உள்ளது?

சிறிய வயதில் தாய், தந்தை, தாத்தா, பாட்டி அனைவரும் நம்மிடம் கூறி வருவது என்னவென்றால்....

நன்கு படிக்க வேண்டும்..

நல்ல வேலை/தொழில் செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும்...

நல்ல குடும்பத்தில் பெண் எடுத்து குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்

சொந்த வீடு, பெரிய கார் வாங்க வேண்டும்.

குழந்தைகளை பெரிய படிப்பு படிக்க வைத்து அவர்க்கு பெரிய வேலை வாங்கி கொடுத்து...

பேரன் பேத்திகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும்....

இவ்வளவு தான்...

இது மட்டும் தான் இந்த மனித பிறவி எடுத்திட்ட நோக்கமா?

ஏன் நமது பெரியவர்கள் கோவிலுக்கு சென்று கடவுள் வழிபாட்டினை தவிர வேறு எதுவும் சொல்லி கொடுப்பதில்லை...?

இதில் அவர்களை சொல்லி குற்றமில்லை அவர்களும் அவர்களுக்கு முன்னோர்கள் அனைவருமே மாயையில் ஆட்பட்டே உள்ளனர்..

இவ்வளவு தான் வாழ்க்கை....

இவ்வாறு வாழ்ந்து இறப்பதுதான் வாழ்க்கையின் முழுமை என அவர்களுது அடி மனதில் ஆழ பதிந்துள்ள விஷயம் ஆகி விட்டது.

அதன்படியே அவர்களும் வாழ்ந்தும் மறைந்தும், அவ்வாறே நம்மையும் செய்ய கூறி பழக்கி விட்டு விட்டனர்.

இதில் ஒரு சிலர் மட்டுமே விதி விலக்காக

நாம் யார்?

நாம் இங்கு எப்படி வந்தோம்?

என யோசனை செய்கின்றனர்.

மேலும் அதை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் பேசினாலோ கேட்டாலோ

உடன் சாமியார், பழம் எனக் கூறி கிண்டல் செய்து தடுக்க பார்க்கின்றனர்.

அதையும் மீறினால் அவன் சாமியார் ஆகிவிடுவான்,

குடும்பத்தை விட்டு போய் விடுவான் எனக் கூறி

மனைவி மக்கள் சொந்தங்களிடம் கூறி

எவ்வாறேனும் அந்த ஆராய்ச்சியில் நுழையாமல் தடுத்து விடுகின்றனர்.


மேலும் மேற்கொண்டு அதற்கு அப்பால் செல்வோருக்கு இந்த சமுதாயம் பெரும் தடையாக உள்ளது.

ஏனெனில் தற்காலம் என்பது மிகவும் சுருங்கி விட்டது

மனிதனில் ஒவ்வொரு செயலிலும் கேளிக்கைகள், ஐம்புலன்களால் அளப்படுகின்ற இந்திரிய சுகங்கள் கொடுக்கின்ற விஷயங்களே நிறைந்து உள்ளன.

அவற்றை வெற்றி கொள்வது மிகவும் பெரும்பாடான விஷயமாகும்...

சற்று சிந்தியுங்கள்....

நாளை தொடரும்....

🌹 நல்லதே நடக்கிறது🌺

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts